×

தமிழக பாஜவில் 5 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் புதிதாக நியமனம்

சென்னை: 5 மாவட்டங்களுக்கு பாஜவில் புதிய பார்வையாளர்களை நியமித்து, மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கே.முரளீதரன், செங்கல்பட்டு தெற்கு எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு கே.வெங்கடேசன், சேலம் மேற்கு ஆர்.ஏ.வரதராஜன், தர்மபுரிக்கு கே.முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழக பாஜவில் 5 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் புதிதாக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Baja ,Chennai ,State President ,Annamalai ,Tamil ,Nadu ,BJP ,President ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது