×
Saravana Stores

பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு செல்லும் 10 சாலைகள் துண்டிப்பு

நெல்லை: பெருவெள்ளத்தால் நெல்லையில் 10 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 17ம் தேதி அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் முழுவதும் சூழ்ந்துள்ளதால் மக்களின் நலன் கருதி நெல்லையில் இருந்து வாகனங்கள் செல்லும் 10 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விபரம். நெல்லை – திருச்செந்தூர் ரோடு துண்டிப்பு; நெல்லை – தூத்துக்குடி ரோடு துண்டிப்பு; நெல்லை – கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில் துண்டிப்பு; நெல்லை புது பஸ்டாண்ட் – அம்பை ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு; பேட்டை – பழைய பேட்டை இணைப்பு ரோடு துண்டிப்பு; நெல்லை டவுண் – சேரன்மகாதேவி ரோடு துண்டிப்பு; முக்கூடல் – கடையம் ரோடு துண்டிப்பு, இடைகால் – ஆலங்குளம் ரோடு துண்டிப்பு, அம்பை – கல்லிடை – வெள்ளங்குளியில் பெருவெள்ளம் ஆகிய இடங்களில் சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

 

 

The post பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு செல்லும் 10 சாலைகள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Himalayan Sea ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி