×

நீட் விலக்கு வந்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே தந்து விடுகிறேன்; நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம்: அமைச்சர் உதயநிதி பேச்சு

தேனி: நீட் ஒழிப்பிற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட அதிமுகவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார். தேனியை அடுத்த லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக முன்னோடிகளுக்கு அக்கட்சி சார்பில் பொற்கிழிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்ட திமுகவின் 1000 முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000 பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், நீட் விலக்கு வந்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே தந்து விடுகிறேன். நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம்; மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். மேலும் நீட் ஒழிப்பிற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார். நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆரியமும், திராவிடமும் இல்லை என்ற ஆளுநர் பேச்சுக்கு, கட்சியின் பெயரிலே அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடினார். மோடியை கண்டு தி.மு.கவின் கிளைச் செயலாளர் கூட அஞ்சமாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

The post நீட் விலக்கு வந்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே தந்து விடுகிறேன்; நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம்: அமைச்சர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Adyanidhi ,Theni ,Sports Minister ,Udayanidhi ,Minister of Sport ,Dinakaran ,
× RELATED கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச...