×

நீட் தேர்வு முறைகேடுகள் எதிரொலி : நுழைவுத் தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்!!

சென்னை : நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதி தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நீட் தேர்வு முறைகேடுகள் அம்பலம் ஆனதை தொடர்ந்து, நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். தேசிய தேர்வு முகமை இவ்விரு தேர்வுகளையும் நடத்துவதை சுட்டிக் காட்டி உள்ள ப.சிதம்பரம், நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்காக இதுவரை யாரும் பொறுப்பேற்கவோ பதவி விலகவோ அல்ல பதவி நீக்கம் செய்யப்பட்டதோ ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்கள் இழந்துள்ள விலைமதிப்பற்ற ஓராண்டு காலத்தையும் பெற்றோர்கள் இழந்துள்ள பணத்தையும் யார் ஈடுகட்ட போகிறார்கள் என்றும் சிதம்பரம் வினவியுள்ளார். நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதி தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ப. சிதம்பரம், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் சுதந்திரம் மாநிலம் அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதே போல நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என கர்நாடக மாநில அமைச்சர் மது பங்காரப்பா வலியுறுத்தி உள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவு அதிகமாகி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ள ஆம் ஆத்மீ கட்சி, இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

The post நீட் தேர்வு முறைகேடுகள் எதிரொலி : நுழைவுத் தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,government ,Dinakaran ,
× RELATED சிறிய வகை கட்டிடங்களுக்கான பணி...