நத்தம்: நத்தம் அருகே தனியார் கிணற்றில் விழுந்த காட்டுமாடுகளில் நத்தம் தீயணைப்பு துறையினர் ஒன்றை இறந்த நிலையிலும் மற்றொன்றை உயிருடன் மீட்டு திங்கட்கிழமை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவடட்டம், நத்தம் அடுத்துள்ள நரசிம்மபுரம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான தனியார் தோட்டம் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு அழகர்கோவில் மலைப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த காட்டு மாடுகளில் அங்குள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக 2 மாடுகள் விழுந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த அழகர்கோவில் வனச்சரகர் குமார் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின்னர் இது குறித்து நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடன் நிலைய அலுவலர் (பொ) விவேகானந்தன் தலைமையில் நிலைய சிறப்பு அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட 10 வீரர்கள் சென்றனர். அப்போது 40 அடி ஆழமுள்ள 20 அடி தண்ணீர் இருந்த கிணற்றில் 2 மாடுகள் கிடந்தது. ஒரு மாடு இறந்த நிலையிலும் மற்றொன்று உயிருடனும் இருந்தது. அவற்றை ஜே சி.பி எந்திர உதவியுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கயிறு கட்டி பத்திரமாக மீட்டு திங்கட்கிழமை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை வனத்தில் விட்டு மலைப் பகுதியை சென்றடையும் படி செய்தனர்.இறந்த மாட்டை நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று உடற்கூறாய்வு செய்து அருகில் புதைத்தனர். காட்டுமாடு கிணற்றில் விழுந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
The post நத்தம் அருகே தனியார் கிணற்றில் தவறி விழுது காட்டுமாடு பலி appeared first on Dinakaran.