×

நாடு முழுவதும் அமலான புதிய சட்டப்பிரிவின்படி சென்னையில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்கு: வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது

சென்னை: நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டப்பிரிவின்படி சென்னையில் முதன்முதலாக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் பிஎன்எஸ் 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய அதிநியாம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

இந்த 3 புதிய குற்றவியல் சட்டமும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதைதொடர்ந்து இந்த 3 புதிய குற்றவியல் சட்டமும் நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டத்தின்படி, சென்னை பெருநகர காவல்துறையில் முதல் வழக்காக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் பிஎன்எஸ் 304(2)ன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அசாம் மாநிலம் ராணிகிராம் மாவட்டம் ஜலன்நகர் பகுதியை சேர்ந்த அப்தாப் அலி (27). இவர் தனது சகோதரன் முஜிபுர் ரகுமானுடன் அசாமில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தார்.

பிறகு நள்ளிரவு 12.10 மணி அளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் வசித்து வரும் உறவினர் வீட்டிற்கு வந்து, பிறகு ஆட்டோவிலேயே ஆயிரிம் விளக்கு சபீ முகமது ரோடு தனியார் குழந்தைகள் மருத்துவமனை அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி, ரட்லான் கேட் 4வது தெரு வழியாக செல்லும் போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அப்தாப் அலியின் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அப்தாப் அலி நள்ளிரவு 1.30 மணிக்கு ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார், புதிய குற்றவியல் சட்டப்படி வழிப்பறி செய்த நபர்கள் மீது பிஎன்எஸ் 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post நாடு முழுவதும் அமலான புதிய சட்டப்பிரிவின்படி சென்னையில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் முதல் வழக்கு: வழிப்பறி செய்தவர் மீது பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Thousand ,Lamps police station ,Chennai ,Ayaravilakku Police Station ,Lamp ,Police Station ,Dinakaran ,
× RELATED வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்