×

நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ.

டெல்லி: நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளனர். cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவித்துள்ளனர். பிப்.15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற தேர்வை 21.65 லட்சம் பேர் எழுதினர்.

இந்தத் தேர்வில் 21,86,940 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை வெளியானதை தொடர்ந்து தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் 99.14% பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம் 99.91% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், பெங்களூரு 99.18% தேர்ச்சி பெற்று 2ம் இடத்திலும் உள்ளன

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கசடைந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.28 சதவீதம் குறைந்துள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 1.98 அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.25 சதவீதமும் மாணவர்கள் 92.27 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ. appeared first on Dinakaran.

Tags : CBSE ,Delhi ,Dinakaran ,
× RELATED 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு தாமதம்...