×

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதியால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் வீணாகும் நிலை.. மாணவர்கள் அதிருப்தி..!!

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் இவ்வாண்டு நிரப்பப்படாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசு வழங்கிய மருத்துவ படிப்பு இடங்களில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் 4 கட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வை முடித்த நிலையில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16, மதுரை எய்ம்ஸில் உள்ள 3 இடங்கள் உள்பட 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு செப்.30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநிலங்களுக்கு திருப்பித் தர மாட்டோம் என்று மருத்துவ ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதியால் இவ்வாண்டு 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் வீணான நிலையில் இவ்வாண்டு 83 இடங்கள் வீணாகின்றன. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர கடும் போட்டி நிலவும் நிலையில் மருத்துவ ஆணைய செயலால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கலந்தாய்வு தேதியை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்து மருத்துவ ஆணையம் நிவாரணம் பெறாவிட்டால் 83 இடங்கள் வீணாகிவிடும். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை மாநிலத்துக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்பு இடங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர மருத்துவ ஆணையம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

The post தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதியால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் வீணாகும் நிலை.. மாணவர்கள் அதிருப்தி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Medical Commission ,CHENNAI ,India ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...