×

தேசியவாத காங். யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை: 42 எம்எல்ஏ ஆதரவு இருப்பதாக அஜித் பவார் அணி தகவல்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அதன் சின்னத்துக்கு உரிமை கோரி மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான அணி தேர்தல் கமிஷனில் மனு செய்தது. இதற்கு பதில் அளிக்க கோரி தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவின் பேரில் சரத் பவார் அணி தாக்கல் செய்த மனுவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சிலர் தங்கள் சுயநலத்துக்காக தனிப்பாதையில் சென்றுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எது உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிய தேர்தல் கமிஷன் நேற்று விசாரணை நடத்தியது. அப்போது 53 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 42 பேரும், 9 சட்டமேலவை உறுப்பினர்களில் 6 பேரும், நாகலாந்து எம்.எல்.ஏக்கள் 7 பேரும், மாநிலங்கள் அவை மற்றும் மக்களவையை சேர்ந்த தலா ஒரு உறுப்பினரும் தங்கள் அணியை ஆதரிப்பதாக அஜித் பவார் சார்பில் வாதாடப்பட்டது. இந்த விசாரணையில் சரத்பவார் நேரில் ஆஜரானார்.

The post தேசியவாத காங். யாருக்கு? தேர்தல் கமிஷன் விசாரணை: 42 எம்எல்ஏ ஆதரவு இருப்பதாக அஜித் பவார் அணி தகவல் appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Election Commission ,Ajit Pawar ,Mumbai ,Maharashtra ,Deputy Chief Minister ,Nationalist Congress Party ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் அங்கன்வாடியில் குழந்தைக்கு கொடுத்த உணவில் பாம்பு