×

பெயர்பலகை, விசிட்டிங் கார்டு மூலம் மருத்துவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை


புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாவது: பெயர் பலகை, விசிட்டிங் கார்டு, மருத்துவ சீட்டு மூலம் மருத்துவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவில் பெயர்பலகைகள் பயன்படுத்தக் கூடாது. அவற்றில், மருத்துவரின் பெயர், தகுதி, சிறப்புகள் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட தகவல்களைத் தவிர வேறு எதுவும் எழுதக் கூடாது. இதனையே மருந்து சீட்டிலும் பின்பற்ற வேண்டும்.

மருந்து கடைகளிலோ அல்லது மருத்துவர் வசிக்காத வேறு இடத்திலோ பெயர் பலகை வைக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட துறையுடன் தொடர்புடைய பல்வேறு மருத்துவ பிரிவுகளில் மருத்துவர் திறன்களையும் பயிற்சியை பெற்றிருந்தாலும், ‘ஆலோசகர்/நிபுணர்’ என்ற அடைமொழிகளை அதற்கான முறைப்படி தகுதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பெயர்பலகை, விசிட்டிங் கார்டு மூலம் மருத்துவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : National Medical Commission ,New Delhi ,Dinakaraan ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...