×

2023-24ம் கல்வி ஆண்டில் இளங்கலை மருத்துவப் படிப்பில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டம்

சென்னை:2023-24ம் கல்வி ஆண்டில் இளங்கலை மருத்துவப் படிப்பில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.நான்கரை ஆண்டுகள் கால அளவு கொண்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2023-24ம் கல்வி ஆண்டு முதல் முதிய நடைமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவந்துள்ளது.

அதன்படி மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் முதல் நாள் முதலே ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் இரண்டு கட்டங்கள் தல 12 மாதங்களிலும் மூன்றாம் கட்டம் 30 மாதங்களிலிலும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் தோல்வி அடையும் மாணவர்கள் மூன்று முதல் 6 வாரங்களுக்குள் மருத்துவத் தேர்வு எழுதும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்முலம் நடைமுறையில் இருந்த துணைப்பிரிவு என்ற திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

The post 2023-24ம் கல்வி ஆண்டில் இளங்கலை மருத்துவப் படிப்பில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : National Medical Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்...