×

போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

மதுரை:போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நாகூர் கனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் கஞ்சா கடத்தலில் தனது 4 சக்கர வாகனம் ஈடுபட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு போலீசாரால் வழக்கு பதிவு செய்யபட்டு வாகனம் பறிமுதல் செய்யபட்டது. ஆனால், இதுவரை தனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வில்லை. விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். ஆனால் மனு தள்ளுபடி செய்யபட்டது. எனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது வாகனத்தை விடுவிக்க உத்தரவு பிறபிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்த நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறபித்திருந்தார். கஞ்சா கடத்தல் வழக்கு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. அந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்ன? அரசு எவ்வாறு செயல்பட வேண்டும். தமிழகத்தில் எத்தனை கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. அந்த வழக்குகளில் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பறிமுதல் செய்யபட்ட வாகனங்களின் நிலை என்ன? என்பது குறித்து காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் அறிக்கை தககல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறபித்தார்.

இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றியது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் அறிக்கையை தாக்கல் செய்தார். குறிபாக அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை ஒன்றினைத்து, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா நியமிக்கபட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. 191 வாகனங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது.

இதனை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுகள் உடனுக்குடன் நிறைவேற்றபட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட்டு வருகிறது என கூறிய நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யபட்ட கஞ்சா பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை அடுத்த மாதற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : High Court ,Madurai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...