×

மைசூர் நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா காவல்துறை முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா தாக்கல் செய்த ரிட் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். இதற்கு முன்னதாக சமுக ஆர்வலர் புகார் தெரிவித்தது மட்டுமின்றி, முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் ஆளுநர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஆக.17-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை அடுத்து 19-ம் தேதி இந்த உத்தரவை ரத்து செய்ய முதல்வர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த 112-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கபட்டது.

இந்த தீர்ப்பில் ஆளுநர் சட்டத்திற்குட்பட்டு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்து முதல்வர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே மக்கள் பிரதிநிதி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிற்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. அந்த உத்தரவும் நீக்கப்படுவதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அதில் மைசூர் நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா காவல்துறை வழக்குப்பதிவு செய்ய 6 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மைசூர் நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக லோக் ஆயுக்தா காவல்துறை முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Lok Ayukta Police ,Mysore ,Bangalore ,Chief Minister ,Sidharamaiah ,Karnataka High Court ,Lok Ayukda Police ,Dinakaran ,
× RELATED மனைவிக்கு 14 வீட்டு மனைகள்...