×
Saravana Stores

காளான் சாப்பிட்ட 3 பேர் பரிதாப பலி: மேலும் ஒன்பது பேர் அட்மிட்

ஷில்லாங்: மேகாலயாவில் காளான் சாப்பிட்ட 3 பேர் பலியான நிலையில், மேலும் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடகிழக்கு மாநிலம் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர், அப்பகுதியில் வளர்ந்துள்ள காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். அவர்களில் ரிவன்சகா சுசியாங் (8), கிட்லாங் டுசியாங் (12), வன்சலன் சுசியாங் (15) ஆகிய மூன்று பேருக்கும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மூன்று பேரும் பலியாகினர்.

தகவலறிந்த மருத்துவ துறையினர் மற்றும் போலீசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மலைப் பகுதியில் வளரும் அனைத்து வகை காட்டு காளான்களையும் சாப்பிட முடியாது. சில காளான் வகைகள் மிகவும் ஆபத்தானவை. இத்தகைய விஷத்தன்மை கொண்ட காட்டு காளான்களை சாப்பிட்டு தான் மூவரும் பலியாகினர். அவர்களது குடும்பத்தை சேர்ந்த மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

The post காளான் சாப்பிட்ட 3 பேர் பரிதாப பலி: மேலும் ஒன்பது பேர் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Shillong ,Meghalaya ,West Jaintia Hills ,northeastern Meghalaya ,
× RELATED மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி