×

மாநகராட்சி கிழக்கு மண்டல குறைதீர் முகாம்

 

மதுரை, மே 18:மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆனையூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் வாசுகி சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 14 மனுக்கள், புதிய சொத்து வரி விதிப்பு வேண்டி 13 மனுக்கள், சொத்துவரி திருத்தம் தொடர்பாக 13 மனுக்கள், காலிமனை வரி விதிப்பு வேண்டி 11 மனுக்கள்,ஆக்கிரமிப்பு தொடர்பாக 7 மனுக்கள், குடிநீர், பாதாளச்சாக்கடை மற்றும் சாலை வசதிகள் வேண்டி 18 மனுக்கள் என மொத்தம் 82 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டன. இம்முகாமில் உதவி கமிஷனர் காளிமுத்தன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி கிழக்கு மண்டல குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : East Zone Grievance Camp ,Madurai ,Madurai Corporation ,East Zone Public Grievance Redressal Camp ,Mayor ,Anayur ,Municipal Corporation East Zone Grievance Redressal Camp ,Dinakaran ,
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...