×

மும்பை தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

புதுடெல்லி: மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணத்தின் போது, அரசியல் சாசனத்தின் 3வது அட்டவணைக்கு முரணாக, தனது பெயருக்கு முன்னால் ‘நான்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்று அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘‘இதுபோன்ற அற்பமான பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குகிறது. எனவே, மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்கிறோம். 4 வாரத்தில் மனுதாரர் அபராதத்தை செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டது.

The post மும்பை தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice of ,Mumbai ,New Delhi ,Chief Justice ,Mumbai High Court ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய சாதனை