மும்பை: மும்பையில் இருந்து மொரீஷியஸ் செல்ல இருந்த ஏர் மொரீஷியஸ் விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் இஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏசி செயல்படாத நிலையில் 5 மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் இறங்க அனுமதிக்காததால் 78 வயது முதியவர் உட்பட பல குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. விமான சேவையை ரத்து செய்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ஏர் மொரீஷியஸ் நிறுவனம் தகவல் வெளியாகியுள்ளது.
The post மும்பை ஏர் மொரீஷியஸ் விமானத்தில் பயணிகளுக்கு மூச்சுத்திணறல்..!! appeared first on Dinakaran.