புதுடெல்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியிருந்தது. இது தொடர்பாக செபி விசாரணை நடத்தி வருகின்றது. அதானி குழும முறைகேடு குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றுவது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணையை மாற்றத்தேவையில்லை என்றும் செபியே தொடர்ந்து விசாரிக்கும் என்று தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதானி குழும பங்குகள் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரே நாளில் நிகர மதிப்பானது 7.7பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனைதொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது 97.6பில்லியானஎ உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் தலைவர் அம்பானி 97பில்லியன் சொத்து மதிப்புடன் சற்றே பின்தங்கியுள்ளார்.
The post முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடம் appeared first on Dinakaran.