×

ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் பலி

*முதல்வரின் நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் : ஊழியர்கள் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் உயிரிழந்த நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியை பெற்றுத்தர வேண்டுமென அவரது கணவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் நிறுவனம் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன். நான் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி கூலி வேலைக்கு என் மனைவி கலைவாணி சென்ற போது, மின்வாரிய ஊழியர்களின் கவனக்குறைவாலும், அஜாக்கிரதையாலும் உயர் மின்னழுத்த கம்பி கரும்பு தோட்டத்தில் விழுந்து கிடந்துள்ளது.

அதில் கால் வைத்து நடந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என் மனைவியின் இறப்புக்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முதலமைச்சரின் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் பலி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,
× RELATED முதல்வர் அறிவிக்கும் அரசு திட்டங்களை அதிகாரிகள் கொண்டு சேர்க்க வேண்டும்