×

முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 1 கப் (நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்தது)
முருங்கைக்கீரை – 2 கப் (நறுக்கியது)
புளிச்சாறு – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2 (நறுக்கியது)
சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
வெல்லம் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் கொள்ளுவை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைப்பதன் மூலம் கொள்ளு வேகமாக வெந்துவிடும். பின்னர் ஒரு குக்கரை எடுத்து, அதில் முருங்கைக்கீரையைப் போட்டு, அத்துடன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானமும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் கொள்ளு, தக்காளி, புளிச்சாறு, உப்பு, வெல்லம், சாம்பார் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான நீரை ஊற்றி, குக்கரை மூடி 6-8 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வேக வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு தயார்.

The post முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்