×
Saravana Stores

மான்டெர்ரி ஓபன் முதல் முறையாக பைனலில் லூலு சுன்

மான்டெர்ரி: மெக்சிகோவில் நடைபெறும் மான்டெர்ரி ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் பைனலில் விளையாட நியூசிலாந்து வீராங்கனை லூலு சுன் தகுதி பெற்றார். அரையிறுதியில் ரஷ்யாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவா (29 வயது, 30வது ரேங்க்) உடன் மோதிய லூலு சுன் (23 வயது, 57வது ரேங்க்) 7-5, 3-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் 2 மணி, 19 நிமிடம் போராடி வென்றார்.

அவர் டபுள்யு.டி.ஏ தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா (19 வயது, 35வது ரேங்க்) 7-6 (9-7), 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் எம்மா நவர்ரோவை (23 வயது, 13வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 58 நிமிடத்துக்கு நீடித்தது. பைனலில் லூலு சுன் – நவர்ரோ மோதுகின்றனர்.

The post மான்டெர்ரி ஓபன் முதல் முறையாக பைனலில் லூலு சுன் appeared first on Dinakaran.

Tags : Lulu Chun ,Monterrey Open ,Monterrey ,New Zealand ,Monterrey Open women's ,Mexico ,Dinakaran ,
× RELATED மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்:...