×

மொபைல் ஆப் மூலம் மோசடி ரூ.278 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: மொபைல் ஆப் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிறுவனத்தின் ரூ.278 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்பிஇசட் டோக்கன் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மொபைல் ஆப்பில் ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் தினசரி ரூ.4 ஆயிரம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு முறை மட்டுமே தொகை வழங்கப்பட்டது. அதன் பின் புதிதாக முதலீடு செய்தால்தான் பணம் என்று ஏமாற்றியுள்ளனர். இதில்,நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. சீனாவுடன் தொடர்புடைய இந்த நிறுவனத்தை நடத்திய நபர்கள், அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் ரூ.278 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

The post மொபைல் ஆப் மூலம் மோசடி ரூ.278 கோடி சொத்து முடக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,The Enforcement Directorate ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா...