×

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதத்துக்கு பதில் வாதம் செய்யப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை வாதத்துக்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் பதில் வாதம் செய்து வருகிறார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டப்படி அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் அல்ல என்று கபில் சிபல் தெரிவித்தார். அனைத்து ஆதாரத்தையும்சேகரித்த பின்பே ஆதாரம் அடிப்படையில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய முடியும்.

ஆனால் சோதனை நடத்த, பறிமுதல் செய்ய, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையின் அதிகாரம் தொடர்பாக வழக்கறிஞர் துஷார் மேத்தா முரணான வாதம் செய்துள்ளார். அமலாக்கத்துறைக்கு காவல்துறையினரின் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் அதற்கு மாறாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது வாதிடுகிறார் என்று கபில் சிபல் தெரிவித்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Court ,Chennai ,Senthil ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...