×

அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செயலலிதா முதல்வராக இருந்த போது போக்குவரத்து ஊழியர் நியமனத்தில் முறைகேடு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இருதயத்தில் 3 ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதால் பையாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.

பையாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செந்திருந்தனர். செந்தில் பாலாஜி ஏற்கனவே காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு; அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை தேதி குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Kaveri Hospital ,Chennai ,Omanthurar Hospital ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...