×

அமைச்சர் எக்ஸ் பதிவு ரயில்வே துறையில் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசு

சென்னை: அமைச்சர் சிவசங்கர் தனது எக்ஸ் தள பதிவு: மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தை ரயில்வே துறையில் வஞ்சித்து வருகிறது. தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை ஒதுக்கவில்லை. இங்கே கொடுக்க வேண்டிய புதிய திட்டங்களையும் வழங்குவதில்லை. ஆனால் வாய் வார்த்தையில் தமிழகத்துக்கு நிறைய செய்வது போன்று ஏமாற்று செய்திகளை பரப்புவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி தலைமையிலான பாஜ அரசை கண்டிக்க வேண்டும் என்றால்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் நாம் திரள வேண்டும். அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன்னிறுத்தி நமது உரிமைகளை வென்றெடுப்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post அமைச்சர் எக்ஸ் பதிவு ரயில்வே துறையில் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசு appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Chennai ,Minister ,Sivashankar ,Modi ,Tamil Nadu ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!