×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 9 இடங்களில் உற்சாக வரவேற்பு

 

நாமக்கல், மே 1: திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று திருச்சி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, சேலம் மாவட்டத்துக்கு கார் மூலம் நாமக்கல் வழியாக சென்றார். அவருக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான எம்.மேட்டுபட்டியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், கட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நாமக்கல் பயணியர் மாளிகை அருகில் காரில் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, நகர திமுக சார்பில் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலையில், நகர செயலாளர்கள் ராணா. ஆனந்த், பூபதி ஆகியோர் தலைமையில் மேளதாளங்கள் முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் கலாநிதி, சட்டதிட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நக்கீரன், விஸ்வநாத், மாவட்ட பிரதிநிதிகள் அன்பரசு, ஈஸ்வரன், ராஜவேல், கவுன்சிலர்கள் விஜய்ஆனந்த், தேவராஜன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கடல்அரசன்கார்த்திக், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, தலைமைகழக பேச்சாளர் ராஜகோபால், மேற்கு நகர பொருளாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமையில், வசந்தபுரம் ஊராட்சியில் வரவேற்பு வழங்கப்பட்டது.

 

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 9 இடங்களில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Namakkal ,DMK State Youth Team ,Tamil Nadu Government ,Youth Welfare and Sports ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...