×

இந்த கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் கலைஞர் பற்றிய பாடம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் (அதிமுக): அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: 86வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்த கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், பணியை குறிக்கும் விதத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் வருகிறது. மேலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை. எனவே, பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

The post இந்த கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் கலைஞர் பற்றிய பாடம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Mahesh Poiyamozhi ,CHENNAI ,Viralimalai ,MLA ,C.Vijayabaskar ,AIADMK ,Annavasal ,Dinakaran ,
× RELATED விராலிமலை, இலுப்பூரில் வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டம்