×

தினை சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:

தினை 1 கப்,
பாசிப்பருப்பு ¼ கப்,
நீர் 4½ கப்,
வெல்லம் 1 கப்,
ஏலத்தூள் 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் ¼ கப்,
முந்திரி பருப்பு 6.

செய்முறை:

முதலில் தினை, பாசிப்பருப்பை தனித்தனியே ஊறவைத்து, பாசிப்பருப்பை 1 டம்ளர் நீரில் வேக வைக்கவும். பாசிப்பருப்பு பாதி அளவு ெவந்தவுடன், ஊறிய தினை அரிசியை அதில் போட்டு மீதி 3½ கப் நீரை ஊற்றி வேக வைக்கவும். அடிப்பிடிக்காமல் கிளறி விட்டு நன்றாக வெந்தவுடன் வெல்லத்தை பொடி செய்து நீர் விட்டு வடிகட்டி வெந்ததில் விட்டு கெட்டியாக வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலத்தூள் போட்டு இறக்கினால் தினை சர்க்கரைப் பொங்கல் தயார்.

The post தினை சர்க்கரைப் பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?