×

ஒவ்வொரு மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர் சங்கம்: அமித்ஷா அறிவிப்பு

காந்திநகர்: குஜராத்தின் காந்திநகரில், 102வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ‘ஒத்துழைப்பு மூலம் செழிப்பு’ நிகழ்ச்சியில் ஒன்றிய கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: ஒன்றிய கூட்டுறவு அமைச்சர் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டில் எந்த ஒரு மாநிலமும் மாவட்டம் கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இல்லாமல் இருக்கக் கூடாது என முடிவு செய்துள்ளோம். இதற்காக மாவட்டத்திற்கு ஒரு கூட்டுறவு வங்கி, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு நிறுவனம் இல்லாத 2 லட்சம் பஞ்சாயத்துகளில் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாய கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) அமைக்கப்படும். கிராமப்புற மற்றும் விவசாயப் பொருளாதாரத்தில் கூட்டுறவுத் துறை முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. கூட்டுறவு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒவ்வொரு மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர் சங்கம்: அமித்ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Milk Producers' Association ,Amit Shah ,Gandhinagar ,Gandhinagar, Gujarat ,Union ,Minister of Cooperation ,102nd International Day of Cooperation ,Union Minister of Cooperation ,Dinakaran ,
× RELATED இமாச்சல் மேகவெடிப்பு: அமித் ஷா விசாரிப்பு