×

வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்திவிட்டதாக கூறினால் வெளிநாடுகளை போல் ஏன் துல்லியமாக சொல்ல முடியல: ஒன்றிய நிதியமைச்சருக்கு அன்புமணி கேள்வி

நெல்லை: நெல்லை அருகே ராஜகோபாலபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் அன்புமணி நேற்றி பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்கள்ளிடம் கூறியதாவது: சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்திவிட்டதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். என்னுடைய கேள்வி மற்றும் ஒரு தமிழனாக என்னுடைய ஆதங்கம் என்னவென்றால், வெளிநாடுகளில் இப்படி துல்லியமா 2 நாட்களுக்கு பிறகு 2 மணியில் இருந்து 4 மணி வரை இந்த பகுதியில் மழை பெய்யும் என்று சொல்கிறார்கள். இங்கு ஏன் வர மாட்டிங்குது. அந்த தொழில்நுட்பம் ஏன் இங்கு வரவில்லை. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகுதுல. ஏன் அந்த தொழில்நுட்பத்தை இங்கு கொண்டு வரது. புதுசா பில்டிங் கட்டினது, டாபுலர் (ரேடார்) கொண்டு வந்தது ஏன் வேலை செய்யல. ஏன் உங்களால சொல்ல முடியவில்லை. அதுதான் என்னுடைய கேள்வி. கேள்வி மட்டுமல்ல என்னுடைய ஆதங்கம்.

ஏன் நான் சொல்றனா வரும் காலம் இதை விட மோசமாக இருக்கும். இதை விட பெரும் வெள்ளம் வரும், பெரும் புயல் வரும். பெரும் சூறாவளி வரும். கடுமையான வறட்சியும் இடையில் வரும். அதற்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நமது வானிலை அப்டேட்டாக இருக்க வேண்டும். உலக தர வானிலை அறிக்கை இங்கு இருக்கணும். பொத்தம் பொதுவாக இந்த மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் மழை பெய்யும், இதுல கனமழை பெய்யும், அதுல லேசான மழை பெய்யும், இங்கு காற்று வரும். காற்றோட கலந்தது.. அதெல்லாம் வேண்டாம். கரெக்டா சொல்லுங்க. தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வளவு செ.மீ மழை பெய்யும்னு சொல்லுங்க. வெளிநாட்டில சொல்றாங்கல… ஏன் உங்களால் சொல்ல முடியல.. அந்த ஆதங்கம் எனக்கு தவிர, அந்த மையத்தை கொச்சப்படுத்த வேண்டும் என்று எண்ணம் எனக்கு இல்லை. உலகத்தில் பல நாடுகளில் வந்த முன்னேற்றம் இங்கு வரணும் நான் பார்க்கிறேன். வானிலை ஆய்வு மையம் துல்லியமா அறிவிச்சாங்க என்றால் உயிர் சேதம் மற்றும் உடமைகளை காப்பாற்றலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்திவிட்டதாக கூறினால் வெளிநாடுகளை போல் ஏன் துல்லியமாக சொல்ல முடியல: ஒன்றிய நிதியமைச்சருக்கு அன்புமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Meteorological Center ,Anbumani ,Union Finance Minister ,Nellai ,BAMA ,President ,Rajagopalapuram ,
× RELATED மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு...