×

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது: பொதுப்பிரிவுக்கு நாளை கலந்தாய்வு

சென்னை: முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் இன்று தொடங்கியது. அதில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் படை வீரர்களின் வாரிசு தாரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், நாளை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என ஏற்கனவே மருத்துவ கல்வி இயக்குனரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை அரசு மருத்துவ கல்லூரிகளில் 160 இடங்களும், 16 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 960 இடங்களும் உள்ளன. 16 சுயநிதி கல்லூரிகளில் இருக்கக்கூடிய 540 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இன்று முதல் தொடங்கி நடக்க உள்ளது. இன்று நடைபெற கூடிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

ஒவ்வொரு தரவரிசை பட்டியலில் இருக்கக்கூடிய மதிப்பெண்கள் மற்றும் ரேங்கிங் லிஸ்ட் வரிசையில் அவர்களுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு. அதனடிப்படையில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் சிறப்பு பிரிவினர்களுக்கு உண்டான மாணவர்கள் இன்று கலந்தாய்வில் பங்கேற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 26 மற்றும் 27ஆகிய இரண்டு நாட்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் நாளைய தினம் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ஆம் கல்வி ஆண்டிற்காக 3415பேர் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டிற்காக 2242 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டிற்காக 1173 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 1660 இடங்களுக்கு உண்டான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. கடந்த அண்டை விட இந்த ஆண்டு 700 விண்ணப்பங்கள் கூடுதலாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்காக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது: பொதுப்பிரிவுக்கு நாளை கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...