×

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் மாரத்தான், மாரத்தானில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் மாரத்தான், மாரத்தானில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார். சென்னையில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் இன்று 4-வது சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியானது 4 பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து பிரிவுகளும் அண்ணா நினைவிடம், மெரினா கடற்கரையில் தொடங்கி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.

மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தானில் சுமார் 75 ஆயிரம் பேர் பங்கேற்றனர். உலகிலேயே அதிகம் பேர் பங்கேற்ற மாரத்தானாக கலைஞர் நினைவு மாரத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 05 கி.மீ. என நான்கு பிரிவுகளாக இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், நீண்ட தூரம் ஓட்டப்பந்தயம் என்ற பிரிவில் இந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. லண்டனில் இருந்து வந்த கின்னஸ் குழுவினர் இதற்கான கின்னஸ் சான்றிதழை வழங்கினர். பரிசு வழங்கும் விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் மாரத்தான், மாரத்தானில் வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Chennai Marathon ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...