×

போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததால் மிசோரமை விட்டு வெளியேறும் மணிப்பூர் மக்கள்: பதற்றத்தை தணிக்க பலத்த பாதுகாப்பு

ஐஸ்வால்: மணிப்பூர் வன்முறை சம்பவமானது அண்டை மாநிலங்களுக்கும் பரவுவதால், மிசோரமை விட்டு மணிப்பூர் மக்கள் வெளியேறி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க மிசோரமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், அண்டை மாநிலமான மிசோரமிலும் ஆங்காங்கே வன்முறை பரவி வருகிறது. மணிப்பூரில் நடக்கும் வன்முறைக்கு எதிராக மிசோ அமைப்புகள், மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதனால் நேற்று முதல் மிசோரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் போராளிகள் குழுவினர், மிசோரமில் வசிக்கும் மெய்டீஸ் மக்கள், தங்களது பாதுகாப்பு கருதி மணிப்பூர் சென்றுவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் மிசோரமை விட்டு வெளியேறி வருகின்றனர். நேற்று மட்டும் 78 பேர் மூன்று விமானங்களில் மணிப்பூருக்குச் சென்றனர். நேற்று முன்தினம் 65 பேர் மணிப்பூர் சென்றனர். எவ்வாறாயினும், இவர்களில் எத்தனை பேர் வன்முறை அச்சத்தால் மணிப்பூர் சென்றனர் என்ற விபரம் தெரியவில்லை.

இவர்கள் மட்டுமின்றி, சாலை வழியாக மிசோரமில் வசித்து வந்த மேலும் 41 மெய்டீஸ் மக்கள் அசாமின் கச்சார் மாவட்டத்திற்குச் சென்றனர். மணிப்பூரின் பதற்றமான சூழ்நிலை காரணமாக, மணிப்பூரில் இருந்த 31 மிசோரம் மாணவர்கள் தங்களது சொந்த மாநிலமான மிசோரம் திரும்பினர் என்று அதிகாரிகள் கூறினர்.

The post போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததால் மிசோரமை விட்டு வெளியேறும் மணிப்பூர் மக்கள்: பதற்றத்தை தணிக்க பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Mizoram ,Aizawl ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...