×

மாம்பலம் – தி.நகர் வரையிலான ஆகாய நடைபாதை 2 நாட்களுக்கு மூடல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னை: மாம்பலம் ரயில்நிலையம்-தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் நகரும் படிகட்டில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஆகாய நடைபாதையில் ஜூன் 13 முதல் மாதாந்திரப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் மக்கள் படிக்கட்டுகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகளில் ஜூன் 13-ல் காலை 10 முதல் 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஜூன் 14-ல் காலை 10 -பிற்பகல் 1 மணி வரை தெற்கு உஸ்மான் சாலை மின் தூக்கியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஜூன் 14 பகல் 2 மணி-5 மணி வரை மார்க்கெட் சாலை ரயில் நிலைய மின் தூக்கியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் நாளில் மக்கள் வழக்கம் போல் படிக்கட்டுகளை மக்கள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

The post மாம்பலம் – தி.நகர் வரையிலான ஆகாய நடைபாதை 2 நாட்களுக்கு மூடல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mampalam ,Aagai Pavement ,Nagar ,Chennai Corporation ,Chennai ,Mambalam Railstation ,Thyagarayar Nagar Bus Station ,Mangalam ,Aagaya Pavement ,Dinakaran ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு...