×

மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தரைமட்ட கிணறு: மண் கொட்டி மூட கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில், ஐந்து ரதம் புராதன சின்னத்தின் மதில் சுவருக்கு அருகே ஒரு தரைமட்ட கிணறு உள்ளது. இந்த கிணறு போதிய தடுப்பு வேலிகள் மற்றும் பாதுகாப்பு வலை இல்லாமல் திறந்தநிலையில் ஆபத்தான வகையில் அமைந்துள்ளது. சாலையில், இருந்து மிகவும் தாழ்வாக இந்த கிணறு இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும்போது, நிலை தடுமாறி வாகனத்தோடு கிணற்றின் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஏரியாமல் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில் கிணறு இருப்பது தெரியாததால் எளிதில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு சற்று அருகே உள்ள திறந்த வெளி கிணற்றால், அங்கு குழந்தைகள் விளையாட பெற்றோர் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கு, மேய்ச்சலுக்கு வந்த 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் அந்த கிணற்றில் தவறி விழுந்தும், கால்கள் உடைந்து காயமடைந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், யாருக்கும் பயன்படாத நிலையிலும் உள்ள கிணற்றை போர்க்கால அடிப்படையில் மண் கொட்டி மூட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தரைமட்ட கிணறு: மண் கொட்டி மூட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Five Ratham Road ,Mamallapuram ,Five Ratham ,Dinakaran ,
× RELATED இன்று கலங்கரை விளக்க தினம் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க இலவசம்