×

மலைக்கிராம துவக்க பள்ளியின் ஹெச்.எம்., இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் அருகே மலைக்கிராம துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் வட்டாரத்திற்குட்பட்ட சின்னவேலம்பட்டி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சேலத்தை சேர்ந்த பாரதி தலைமை ஆசிரியராகவும், ராஜம் இடைநிலை ஆசிரியராகவும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஇஓ முருகன், திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சந்தோஷிற்கு, சிஇஓ முருகன் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த டிஇஓ சந்தோஷ், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் ஆசிரியர் ராஜம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post மலைக்கிராம துவக்க பள்ளியின் ஹெச்.எம்., இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : H. ,Malaikirama Initial School M. ,Salem ,Malaikirama Primary School ,Salem District ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல்...