×

மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியாகும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிரா மாநில சட்டபேரவையின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 3ம் தேதியும், ஹரியாணா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26 தேதியும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜனவரி 2025லும் முடிவடைகிறது. இதேபோல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு செல்லும் தேர்தல் ஆணையர்கள் குழு அந்தந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கையை இறுதி செய்வது, வாக்காளர் பட்டியல் மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேர்தலை ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புல் எந்தெந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது என குறிப்பிடப்படாததால், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. செப்டம்பர் 30-க்குள் ஜம்மு காஷ்மீர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியாகும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Haryana ,Jharkhand ,Election Commission of India ,Delhi ,Maharashtra State Legislature ,Haryana Legislature ,Dinakaran ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...