மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்துள்ளது. இதன்படி இன்றைய விலை நிலவரம் கிலோவில் வருமாறு: கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை, வெண்டைக் காய் ரூ.30, பாகற்காய் ரூ.40, புடலங்காய் ரூ.25, உருட்டு மிளகாய் ரூ.50, சம்பா மிளகாய் ரூ.40, சீனி அவரைக்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.60, நைஸ் அவரை ரூ.40, பெல்ட் அவரை ரூ.60, பட்டை அவரை ரூ.50. மாங்காய் கல்லாமை ரூ.70, மாங்காய் நாடு ரூ.50, நெல்லிக்காய் ரூ.70, சின்னவெங்காயம் ரூ.40, பல்லாரி ரூ.30, கருவேப்பிலை ரூ.60, மல்லி ரூ.50, புதினா ரூ.20, இஞ்சி ரூ.150.
தக்காளி 15 கிலோ கொண்ட பெட்டியின் விலை ரூ.120 முதல் ரூ.200 வரை, ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ.40, கேரட் ரூ.30 முதல் ரூ.50 வரை, சோயா ரூ.80, பட்டர் பீன்ஸ் ரூ.100, ஜெர்மன் பீன்ஸ் ரூ.60, ரிங் பீன்ஸ் ரூ.60, பட்டானி ரூ.120, சவ்சவ் ரூ.20, குடை மிளகாய் ரூ.60, பஜ்ஜி மிளகாய் ரூ.60, பீட்ருட் ரூ.30 முதல் ரூ.40 வரை, முள்ளங்கி ரூ.20, மொச்சை ரூ.50 முதல் ரூ.70 வரை, டர்னிப் ரூ.40, நூக்கல் ரூ.40, சேனை ரூ.50, சேம்பு ரூ.70, கருனை ரூ.40, உருளை ரூ.40 முதல் ரூ.50 வரை, பாகல் சிறியது ரூ.120, முட்டைகோஸ் ரூ.30, கோவக்காய் ரூ.30. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘நாட்டு காய்கறிகள் வரத்து அதிகமிருப்பதால், பீர்க்கை, சுரை துவங்கி வெண்டை பாகற்காய் வரையிலும் விலை குறைந்திருக்கிறது’’ என்றனர்.
The post மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது appeared first on Dinakaran.