×

வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்!

டெல்லி: வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு செப்.29ம் தேதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாக 29ம் தேதி உருவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29ம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மற்றும் செப்.28,29ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர ஆந்திரா, தெலங்கானாவிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

The post வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,India Meteorological Department ,Delhi ,North Andaman ,Middle East Bay of Bengal ,
× RELATED ஐபேக் நிறுவன ரெய்டு; உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு