×

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்..!!

சென்னை: ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கீழ்பவானி பிரதான கால்வாய்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்ததால் காலப்போக்கில் அவை சிதைந்து உடைந்து பலமிழந்து போய்விட்டது. கரையில் வைக்கப்பட்ட மரங்கள் பெருமளவில் வளர்ந்து வேர்கள் மூலம் கரைகள் உடைய காரணமாகிவிட்டது. மதகுகள் மற்றும் மழைநீர் செல்லும் பாலங்கள் காலப்போக்கில் சிதைந்து விட்டன. இவைகளையெல்லாம் சீரமைத்தால் தான் விவசாயத்துக்கு தண்ணீர் கடைமடை வரை தடையின்றி கிடைக்கும் என தெரிவித்தார்.

The post ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Minister Durai Murugan ,Kilpawani main canal ,Erode district ,Chennai ,Minister ,Duraimurugan ,Kilibawani main canal ,Dinakaran ,
× RELATED குமரியில் தியானம் செய்யும்...