×

லண்டன் செல்லும் விமானம், நான்கரை மணி நேரம் தாமதம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை: லண்டன் செல்லும் விமானம், நான்கரை மணி நேரம் தாமதத்தால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தினமும் லண்டனில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:35 மணிக்கு சென்னை வரும். சென்னை வந்து விட்டு மீண்டும் காலை 7:45 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். லண்டனில் மோசமான வானிலையால் நான்கரை மணி நேரம் தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை வரும் என்று அறிவித்துள்ளனர். விமானம் மீண்டும் பகல் 12 மணிக்கு நான்கரை மணி நேரம் தாமதமாக லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளது

The post லண்டன் செல்லும் விமானம், நான்கரை மணி நேரம் தாமதம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : London ,Chennai International Airport ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில்...