×

மக்களவை தேர்தல் முடியும் வரை ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு மாற்றிவிட வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மக்களவை தேர்தல் முடியும் வரை ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு மாற்றிவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு ஆளுநரை மாற்றக்கூடாது என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். திராவிடம் என்றால் என்ன எனக் கேட்கிறார்களே அவர்களின் பதவியே வேஸ்ட்தான். திராவிடம் என்றால் என்ன என்று கேட்க வைத்திருப்பதே திராவிடம் தான். மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழ்நாடு மக்கள் ஆளுநர் ரவியை பொருட்படுத்தவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post மக்களவை தேர்தல் முடியும் வரை ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு மாற்றிவிட வேண்டாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Governor RN ,Ravi ,Lok Sabha ,Chief Minister ,M K Stalin ,Chennai ,M.K.Stal ,Governor ,R.N.Ravi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!