டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொள்கிறது. இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக டெல்லியில் இன்றும், நாளையும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்கிறது. ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படும். அதோடு வெளியாக இருக்கும் இறுதி வாக்காளர் பட்டியல், 25-ந் தேதி நடைபெறவுள்ள தேசிய வாக்காளர் தினம் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
The post மக்களவை தேர்தலையொட்டி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.! appeared first on Dinakaran.