×

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவு மோடியின் தனிப்பட்ட, அரசியல் வாழ்க்கையின் தார்மீக தோல்வி. என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். சோனிய காந்தி எழுதியுள்ள கட்டுரையில், “2024 ஜூன் 4ம் தேதி வாக்காளர்கள் ஒரு தெளிவான, உறுதியான தீர்ப்பை வழங்கினர். தேர்தல் பிரசாரத்தில் தன்னை தெய்வீக அம்சம் கொண்டவன் என்று சொல்லி கொண்ட மோடியின்தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு ஏற்பட்ட தார்மீக தோல்வி. வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தேர்தல் முடிவால் தெரிகிறது. ஆனால் எதுவுமே நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்.

எந்தவென்றிலும் கருத்தொற்றுமையை போதிக்கும் மோடி மோதல்களுக்கு மட்டுமே பதிலளிக்கிறார். தேர்தல் முடிவுகளை மோடி புரிந்து கொண்டார், அதை உள்வாங்கி கொண்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் தெரியவில்லை.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 146 உறுப்பினர்கள் இருஅவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை ஒன்றிய அரசின் 3 சட்ட திருத்த மசோதாக்களை நிறுத்தி வைக்க வேண்டும். நாடு முழுவதும் பல குடும்பங்களை சீரழித்த தேர்வு வினாத்தாள் கசிவுகள் பற்றி எதுவும் பேசாமல் மோடி மவுனமாக இருக்கிறார்” என குற்றம்சாட்டி உள்ளார்.

The post மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha election ,Modi ,Sonia Gandhi ,New Delhi ,Lok Sabha ,Congress Party's Parliamentary Committee ,
× RELATED சொல்லிட்டாங்க…