×

60 சதவீத மானியத்தில் மீனவர்களுக்கு கடனுதவி: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவர்கள் கீழ்க்கண்ட கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்பட உள்ளது, ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்பட உள்ளது.

மீன் விற்பனை அங்காடி (அலங்கார மீன் வளர்ப்பு, மீன் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்பட உள்ளது. கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ3 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படுகிறது. புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படுகிறது.

புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்பட உள்ளது. நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ4 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவின ருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60% மானியம் வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் ரூ7.50 லட்சம் மதிப்பீட்டில் மீன் வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படுகிறது.

நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கான செலவினமான ரூ.14.00 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படுகிறது. குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் ரூ73,721 மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகிற்கு பொதுபிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, இத்திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை-600115. (கைப்பேசி எண்.84891 89720) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post 60 சதவீத மானியத்தில் மீனவர்களுக்கு கடனுதவி: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district administration ,Kanchipuram ,Kanchipuram District ,Fishermen ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...