×

நச்சுக்கொட்டைக்கீரை மிளகுப் பொரியல்

தேவையானவை:

கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை – 2 கப்,
பெரிய வெங்காயம் – 1,
பூண்டு – 6 பல்,
வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம். பொரியலில் மிளகு வாசம் அசத்தலாக இருக்கும். நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

 

The post நச்சுக்கொட்டைக்கீரை மிளகுப் பொரியல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்