×
Saravana Stores

ஒன்றிய அமைச்சர்களுடன் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டப்படி இன்று டெல்லியை முற்றுகையிடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் பேரணியாக வர உள்ளதால் அவர்களை தடுக்க டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று டெல்லி நோக்கிய பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முன்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மாலை இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றிய அரசு நேற்று நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் இன்று விவசாயிகள் பேரணி நடத்த உள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட தீவிரம் காட்டி வருகின்றனர். டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பேரணியாக வர உள்ளதால் அவர்களை தடுக்க டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க பல்வேறு சாலைகளில் இரும்பு, கான்கிரீட் தடுப்புகளை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

சிங்கூர் எல்லையில் ஏராளமான போலீசார் குவிப்பு; சாலைகள் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை கெடுபிடிகளை தாண்டி விவசாயிகள் செல்வதை தடுக்க ட்ரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post ஒன்றிய அமைச்சர்களுடன் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டப்படி இன்று டெல்லியை முற்றுகையிடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union ,Delhi ,EU government ,EU ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...