×

சட்டம், ஒழுங்கு சீரடையாவிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் ரூ.14,000 கோடி திட்டங்கள் ரத்து செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி எச்சரிக்கை

புதுடெல்லி:பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள ஜலந்தர், லூதியானா மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், ஒப்பந்ததார்கள் மீது அண்மையில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்கரி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “ஜலந்தர், லூதியானா மாவட்டங்களில் நடந்த சம்பவங்கள் எனக்கு தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை சீராகவில்லை எனில், ரூ.14,288 கோடி மதிப்பில் 293 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கும் நெடுஞ்சாலை பணிகளை நிறுத்துவது அல்லது ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

The post சட்டம், ஒழுங்கு சீரடையாவிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் ரூ.14,000 கோடி திட்டங்கள் ரத்து செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Punjab ,Union Minister ,Gadkari ,New Delhi ,Aam Aadmi Party ,Chief Minister ,Bhagwant Man Singh ,National Highway ,Jalandhar ,Ludhiana ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தில் விமர்சனங்களை பொறுத்து...