×

கும்பலகாய் அல்வா

தேவையானவை:

வெள்ளை பூசணி – 1 கப்,
சர்க்கரை – முக்கால் கப்,
நெய் – கால் கப்,
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்,
கோவா – 5 ஸ்பூன்,
பாதாம் மிக்ஸ் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

பூசணித் தோல் நீக்கி சதைப்பகுதியை மட்டும் துருவி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேக விட்டு, ஆறிய பிறகு சதைப் பகுதியில் உள்ள நீரை நன்கு பிழிந்து வடித்து விடவும். அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டுச் சூடானதும் பூசணித் துருவலை சேர்த்து வதக்கவும். பின் சர்க்கரை சேர்த்து குறைந்த தணலில் வைத்து கிளறி, இடையிடையே நெய் சேர்த்து கலவை நன்கு திரண்டு வரும்போது பாதாம் மிக்ஸ் சேர்த்து கிளறி ஸ்வீட் இல்லாத கோவா சேர்த்து, ஏலக்காய் தூள் கலந்து கிளறி இறக்கவும். சுவையான அல்வா ரெடி.

The post கும்பலகாய் அல்வா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சத்துமாவு கேக்