×

கும்பகோணத்தில் பொதுத்தேர்தலைப் போன்ற நடைமுறைகளுடன் நடந்த வாக்குப்பதிவு: மீனவர் சங்கத் தேர்தலை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணி

கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்நாட்டு மீனவர் சங்கத்திற்கான தேர்தல் பொது தேர்தல் போலவே வாக்குச்சாவடி முகவர்கள் அழியாத மை என கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவில் உள்நாட்டு மீனவர் சமூகமான பருவத ராஜகுள சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறுப்புகளுக்கு 9 பேர் போட்டியிட்டனர்.

சுமார் 2000 பேர் வாக்களித்தனர். பொது தேர்தலை போலவே வாக்குசாவடி முகவர்கள் அழியாத மை சங்க உறுப்பினர் அடையாள அட்டை சரிபார்ப்பு என கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற்றது. மேலும் மீனவ சங்க தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post கும்பகோணத்தில் பொதுத்தேர்தலைப் போன்ற நடைமுறைகளுடன் நடந்த வாக்குப்பதிவு: மீனவர் சங்கத் தேர்தலை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Fishermen ,Union ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா